அஞ்சல் சேவை ஒரு தலைபட்சமாக நிறுத்தம் – பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு

அஞ்சல் சேவையை ஒரு தலைபட்சமாக பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

0
163
-Ads-

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அஞ்சல் சேவையை பாகிஸ்தான் ஒரு தலைபட்சமாக நிறுத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய மத்திய தகவல் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், இந்த தகவலை கூறினார்.

ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-  பாகிஸ்தான் அஞ்சல் சேவையை ஒரு தலைபட்சமாக நிறுத்தியுள்ளது. எந்த முன் அறிவிப்பையும் பாகிஸ்தான் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் செயல் சர்வதேச விதிகளை மீறியதாகும்” என்றார்.  மேலும்,  எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், இந்தியாவுக்கு  தபால்துறை கடிதங்களை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here