அதிமுக பேனரால் இளம்பெண் பலி; இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சாலையில் சிந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

0
341
-Ads-

சென்னை: தமிழ்நாட்டில் பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் லட்சுமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் டிராபிக் ராமசாமி பேனர் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாய்  அமர்வு முன் வந்தது.

அப்கோது இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சாலையில் சிந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு இதுதானா மதிப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எத்தனையோ உத்தரவு பிறப்பித்த பிறகும் பொதுமக்களின் ரத்தம் சாலையில் சிந்திக்கொண்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர். பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவிக்க முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம் என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அரசும், கட்சியும் நிவாரணம் அளித்தால் போதுமா? என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

பேனர் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பிற்பகலில் ஆஜராக காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை 2.15க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீதிபதிகள் கேள்வி

உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் பதில் என்ன? என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கினால் மட்டும் போன உயிர் திரும்ப வந்துவிடுமா? என்றும், உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சம்பாதித்து கொடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிமுக கொடிகளை அகற்ற உத்தரவு

சென்னையில் முதல்வர் செல்லும் கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரை சாலை நெடுகிலும் நடுவில் உள்ள சாலை தடுப்பில் 3 அடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகளை அகற்ற ஆணையிட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்சிக்கொடிகளை உடனே அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here