இனியொரு சுஜித்தை இழக்கக் கூடாது; இதைச் செஞ்சா ரூ.5 லட்சம் சன்மானம் உண்டு!

0
281
-Ads-

போர்வெல் அமைக்கும் போது முறையாக விதிகளை பின்பற்றாதது மற்றும் அலட்சியம் காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

தண்ணீருக்காக தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்படும் போது, அவற்றை மூடாமல் விட்டு விடும் அலட்சியப் போக்கு தொடர்கிறது.

இதன் காரணமாக ஓடி விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகள், ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றன.

இவ்வாறு மாயி, தேவி, மதுமிதா, சுதர்சன், கோபிநாத், முத்துலட்சுமி, மகேஷ் ஆகியோரின் வரிசையில் குழந்தை சுஜித்தும் இணைந்து கொண்டார்.

இந்த துயர நிகழ்வை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனெனில் அலட்சியம் காட்டியது நாம் தானே. ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் விஷயத்தில் நிலத்தின் உரிமையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பயனற்ற கிணறுகளை மூட முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விதிமுறைகளை மதித்து பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

குழந்தை சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு உள்ளிட்ட பல்வேறு குழுவினர் போராடினர். ஆனால் யாருடைய செயல்பாடுகளும் பலன் அளிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் காண வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் யாரேனும் தவறி விழுந்தால், அவர்களை பத்திரமாக மீட்க புதிதாக கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கவும் தமிழக அரசு முன்வந்துள்ளது.

அதாவது தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here