இப்போது அரசியல் இல்லை: நடிப்பதில் ரஜினி மும்முரம்

0
192
-Ads-

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார்’ படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவிட்ட முருகதாஸ் இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து, பல ஆலோசர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறார் ரஜினி. அதனால் எப்படியும் விரைவில் கட்சித் துவங்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், கட்சி ஆரம்பிக்கப் போவது குறித்து எதுவும் தெரிவிக்காத ரஜினி, தன்னுடைய அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட வைத்திருக்கிறார். ரஜினியின் 168வது படமாக உருவாகும் இப்படத்தை சிவா இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. தற்காலிகமாக தலைவர் 168 என பெயரிட்டுள்ளனர்.

2.0 படத்திற்கு பின் ரஜினி நடிக்கமாட்டார் என அப்போது பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதையடுத்து பேட்ட படத்திலும், தற்போது தர்பார் படத்திலும் நடித்தார். சரி இனி அடுத்தது அரசியல் தான் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் புதுப்பட அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here