உன்னை கட்டிப்பிடிச்சு அழக்கூட நாதியில்லாம போச்சுடா.. எல்லாமே முடிஞ்சு போச்சு!

0
161
-Ads-

மணப்பாறை: “உன்னை கட்டிப்பிடிச்சு அழக்கூட நாதியில்லாம போச்சுடா” பெற்ற தாய் கதறி அழுதது அனைவரையுமே வெடித்து அழ செய்தது!

முதல்நாள் குழந்தை குழிக்குள் விழுந்தபோது, அவன் பயந்துவிடக்கூடாது என்பதற்காக அவனது அம்மா கலாமேரியை அழைத்து பேச வைத்தார்கள்.

அப்போது,”அழுகாத சாமி, அழுகாத.. அம்மா எப்படினாலும் உன்னை மேல எடுத்துடுவேன்” என்று சுஜித்திடம் பேச்சு தந்து கொண்டே இருந்தார். அதற்கு “உம்.. சரிம்மா” என்று குழந்தை பதிலளித்தான். இதைகேட்டதும் அனைவருக்குமே ஒரு தெம்பு வந்தது. ஆனால் இதுதான் அவனது கடைசி வார்த்தை என்று யாருக்குமே அந்த சமயம் தெரியாது.

மகனின் ஒவ்வொரு நிலைமையையும் காண முடியாமல் மேரி, பெரும்பாலும் மயக்க நிலையிலேயே இருந்தார். ஆறுதல் சொல்லவந்த தலைவர்களிடம் மேரி விக்கி விக்கி நா தழு தழுக்க.. கைகூப்பி கேட்டுக் கொண்ட ஒரே வார்த்தை “என் புள்ளைய எப்படியாச்சும் காப்பாத்தி குடுத்துடுங்க” என்பதுதான். பெற்ற தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றுகூட தெரியவில்லை.. அவர்களை நினைத்தாலே நெஞ்சு வெடிக்கிறது என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலங்கியபடியே சொன்னார்கள்.

இந்தமுறை தீபாவளி என்ற ஒரு பண்டிகை வந்துபோனதாக பெரும்பாலான மக்களுக்கு நினைவில்லை.. பகிரங்க பண்டிகை புறக்கணிப்பு என்பது நடந்தது… பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், தொழுகைகள் என நாடு முழுவதும் மக்களின் ஈர மனசு வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு ஏன்? நாத்திகர்களேகூட.. மத வேறுபாடுகளைத் தாண்டி இவ்வளவு பேரின் நம்பிக்கைக்காகவாது இந்த கடவுள் இருந்து தொலைக்கக்கூடாதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதில் யாரை குறை சொல்ல முடியும்.. ஆளும்தரப்பு, எதிர்தரப்பு, பொது தரப்பு என்பதையெல்லாம் யாராலும் இதில் குறைத்து குற்றஞ்சாட்டிவிட முடியாது. ஆனால், ஒரே ஒரு கேள்வி மட்டும் சாமான்யனை பிடித்து உலுக்கி கொண்டே இருக்கிறது. உச்சக்கட்ட முயற்சி என்று கொண்டுவரப்பட்ட அந்த விலையுயர்ந்த மெஷினை ஏன் முதல்கட்ட முயற்சியிலேயே கொண்டு வந்திருக்கக் கூடாது?” என்பதுதான்.

அதற்கு தேவைப்படாது என்று நினைத்து விட்டார்களோ, அல்லது சம்பிரதாய விதிகள் ஏதேனும் குறுக்கிட்டதா என்று தெரியவில்லை. இதை வேண்டுமென்றே யாருக்கும் செய்ய மனமில்லாமல் இருந்தாலும், கடைசி கட்ட முயற்சிகள் முதல் கட்ட முயற்சிகளாக இருந்திருக்க வேண்டும் என்பதே ஆதங்கமாக இருக்கிறது.

அனுமதியற்ற ஆழ்துளை கிணறுகளையும், அவை அலட்சியமாக விடப்படுவதையும் தடுப்பதில் நிச்சயமாக பொதுமக்களின் விழிப்புணர்வும், கண்காணிப்பும், ஒத்துழைப்பும் இனியாவது அவசியமாகிறது. சுஜித்தின் பெற்றோர்களும்தான் இதில் அடக்கம். விடிகாலை குழிக்குள் இருந்தே துர்நாற்றம் வருவதாக சொல்லவும்.. அப்படியே கொண்டு போய் போஸ்ட்மார்ட்டம் செய்து மொத்தமாக கட்டி கொண்டு வந்து தந்துவிட்டார்கள். துறுதுறுவென ஓடியாடியபடி பார்த்த குழந்தையை கண்ணெதிரே பொட்டலமாக விழுந்துகிடப்பதை கண்டு பெற்ற தாயின் கதறல் சுற்றுவட்டாரத்தை உலுக்கியது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here