டிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

0
230
-Ads-

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது அனைத்து பணிகளும் முடிந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்வதாகவும் மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞரும் எம்பியுமான வில்சன், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் எல்லை மறுவரையறை செய்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியிருப்பதாக தெரிவித்தார். 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here