தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
317
-Ads-

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக வங்க கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை கிடைக்கிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.  இந்த தாழ்வு மண்டலமானது   வடகிழக்கு நோக்கி நகரும் என்பதால்  தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2  நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னையில் போரூர், வளசரவாக்கம், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்பட நகர் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

நாகையில் கடல் சீற்றத்தால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை புஷ்பவனம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குமரியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here