தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்

தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி இடம்பெற்றதால், அனிமேஷன் திரைப்படம் ஒன்று 3 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

0
171
-Ads-

அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்) செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முழு நீள அனிமேஷன் படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் படத்தில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது, தென் சீனக்கடல் தொடர்பான சிறிய காட்சி.

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம்.

ஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன.

எனவே சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ‘அபோமினபிள்’ படக்குழுவினர் இதை ஏற்கவில்லை. எனவே அந்த 2 நாடுகளிலும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மலேசிய தணிக்கை துறையும் சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் தணிக்கை துறைக்கு தெரிவித்த பதிலையே மலேசிய தரப்புக்கும் ‘அபோமினபிள்’ படக்குழு தெரிவித்தது. அதனை தொடர்ந்து மலேசியாவும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதித்தது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here