“நாட்டின் ஒரே மொழியாக இந்தி” அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில், அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியதை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

0
270
-Ads-

இந்தி தினத்தையொட்டி பாஜக தலைவர் அமித் ஷா “ஒரே நாடு ஒரே மொழி” என்ற அடிப்படையில் வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றும் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பாஜக தலைவரின் இந்த கருத்து, இந்தியை திணிக்க முயற்சி செய்யும் வகையில் இருப்பதாக பல்வேறு தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அமித் ஷாவின் கருத்து குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எண்ணத்தை இதில் பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஒரு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கலாச்சாரத்தில், இதற்கு சாத்தியக்கூறு உண்டு என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் அண்ணா உரையாற்றும் போது, முன்னாள் பிரதமர் நேருவும் அவையில் அமர்ந்திருந்தார். அப்போது பேசிய அண்ணா,  அதிகமான மக்கள் பேசுகிறார்கள் என்பதால் இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமா..? அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மயில்களை விட காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் நாம் தேசிய பறவையாக மயிலை தான் கொண்டிருக்கிறோம் தவிர காக்கைகளை அல்ல என்ற வாதத்தை முன்வைத்து அனைவரின் ஆதரவையும் அண்ணா அப்போது பெற்றார்.

தமிழ் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட மொழி என்பதை தற்போதைய பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மொழியின் மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பதாக அவர் பல்வேறு தருணங்களில் எடுத்துரைக்கிறார். எனவே தமிழ் மொழிக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது என  கூறினார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here