நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க!

0
190
-Ads-

டெல்லி: சிறு குறு தொழில் நிறுவனம் வைத்துள்ளவர்கள், விவசாயிகள் மற்றும் வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதார மந்தநிலையை சீர்செய்யும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வருகிறார். அந்த வகையில் வியாழக்கிழமை மாலை நாட்டில் பணப்புழகத்தை அதிகரிப்பது குறித்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூரின் மேற்பார்வையில் 200 , 200 மாவட்டங்களாக கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாகவும், இந்த கடன் வழங்கும் முகாம்கள் செப்டம்பர் 24ம் தேதி தொடங்க உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “வங்கிகளும், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் பணப்புழகத்தை அதிகரிக்க செப்டம்பர் 24ம் தேதி முதல் செப்டம்ர் 29 ம் தேதி வரை நாட்டின் 200 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்களை நடத்தும். அதன் பிறகு இரண்டாம் கட்டமாக 200 மாவட்டங்களில் அக்டோபர் 10ம் தேதி முதல் அக்டோர்ப 15ம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடக்கும்,

சிறு குறு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளவர்கள், விவசாயிகள், வீடு வாங்க ஆசைப்படுவோர், கார் உள்ளிட் வாகனங்கள் வாங்க விரும்புவோர். இடம் வாங்க விரும்புவோர் என பணம் தேவைப்படுவோர் இந்த கடன் முகாம்களில் கலந்து கொண்டு உடனடியாக கடன் பெறலாம்.

இந்த கடன் வழங்கும் முகாமில் கடன் பெற விரும்பும் ஒரு பழைய வாடிக்கையாளர் (ஏற்கனவே கடன் வாங்கியவர்கள்)- ஐந்து புதிய வாடிக்கையாளர்கள் என்ற விகிதத்தில் கடன்கள் வழங்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.

இதேபோல் கடன் வாங்கி கட்ட முடியாமல் உள்ள சிறுகுறு நிறுவனங்களின் சொத்துக்களை செயல்படாத சொத்துக்களாக மார்ச் 31 2020வரை அறிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளோம்” இவ்வாறு கூறினார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here