பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவு

0
149
-Ads-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.  80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. 

சுஜித்தின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் பலரும் சோகத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில்,
குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும். 
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து 94458 02145 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here