பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் பலி

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள்.

0
160
-Ads-

பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 22 கி.மீ. ஆகும் என்று தெரிவித்துள்ளது.

திடீர் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதில் ஓட்டல், அலுவலக கட்டிடங்கள் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான கோடாபடோவில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக துலுனான் நகரில் 7  பேர் பலியாகினர். இந்நிலையில் மீண்டும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here