பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி. அரசு முதலிடம்: வெட்கக்கேடானது; பிரியங்கா காந்தி தாக்கு

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி. அரசு முதலிடத்தில் உள்ளது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

0
162
-Ads-

கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை மத்திய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

குற்றங்களின் வகைகள், அவை தொடர்பாக பதிவான வழக்குகள், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த விவரங்களை என்சிஆர்பி வெளியிட்டு வருகிறது.

தற்போது கடந்த 2017 ஆண்டு நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை என்சிஆர்பி வெளியிட்டுள்ளது. 
மூன்றாண்டுகளுக்கு பிறகு தற்போது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்திய என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி,
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 10.1 சதவீதத்துடன் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 9.4, 8.8, 7.7 சதவீதங்களுடன் மராட்டியம், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. 5.8 சதவீதத்துடன் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ரேபரேலிக்கு வந்த உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 
“பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here