பேனர் பற்றி பேசினால் அதிமுக இந்தளவு டென்ஷன் ஆவது ஏன்? வெளிவராத அதிர்ச்சி தகவல்!

0
227
-Ads-

அண்மைக் காலமாக ஆடியோ லாஞ்ச்சிங் என்பது சினிமா ஹீரோக்களின் அரசியல் மேடையாக மாறி வருகிறது. “பிகில்’ பட பாடல் வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் கலாச்சாரத்தைப் பற்றி விமர்சித்து, அரசியலும் பேசியதுடன், பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ விவகாரத்தில் யார் யார் மீதோ வழக்கு போடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது போடவில்லை என தன் வேகத்தை வெளிப்படுத்திப் பேசினார். அதனை வரவேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், “நியாயமாகப் பேசியிருக்கிறார். வாழ்த்துகள்” என்றார். ஆளுந் தரப்பு அமைச்சர்கள் விஜய் மீதும் கமல் மீதும் பாய, கமல் கோபமாகி தனது வழக்கமான பாணியில் அ.தி.மு.க. மீது பாய்ந்தார். சீமான், அமீர் ஆகியோரும் விஜய் பக்கம் ஆதரவு தெரிவித்தனர்.

பேனர் பலி பற்றி பேசினால் அ.தி.மு.க. தரப்பு இந்தளவு டென்ஷன் ஆவது ஏன்?

சென்னையில் ஆளுங்கட்சி பிரமுகர் ஜெய கோபால் வைத்த பேனரால் சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பான வழக்கு 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆனால் 23-ம் தேதியே அந்த வழக்கை வேறொரு மனு மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ். சுபஸ்ரீ மரணமடைந்து 11 நாட் களாகி விட்டன. இன்னமும் போலீசார் பேனர் வைத்த குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை. சட்டவிரோதமாக பேனர் வைத்த ஆளும் கட்சி பிரமுகருக்கு உடந்தையாக செயல்பட்டு கடமை ஆற்றாமல் இருந்த மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமாகியிருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை அறிய நக்கீரன் களமிறங்கியது.

இறந்து போன சுபஸ்ரீ ஒரு மென்பொருள் கம்பெனி பொறியாளர் மட்டுமல்ல இயற்கை முறையில் அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பும் கம்பெனியையும் நடத்தி வந்தார். அத்துடன் மனச்சோர்வு அடைபவர்களை ஆக்ரோஷமான நடனம் மூலம் குணப்படுத்தும் “ஸ்கூபா’ நடனம் என்கிற அமெரிக்க நடனத்தின் சர்வதேச பயிற்சியாளர்.

மற்றவர்களின் மனச்சோர்வை நடனத்தின் மூலம் போக்கிய சுபஸ்ரீயின் மரண நிமிடங்கள் மறக்க முடியாததாகத்தான் இருந்தது என்கிறார், சுபஸ்ரீயின் மரணத்தை லைவ் ஆக பதிவு செய்த எப்.சி.ஏ. கார் டெக்கார்ஸ் என்கிற கம்பெனியில் வேலை செய்பவர். மதியம் 2.40 மணிக்கு சுபஸ்ரீ ஓட்டி வந்த யமஹா ரே என்கிற வண்டி மீது அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் அவரது மகன் சி.ஜெ.கார்த் திக், மேனகா ஆகியோரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து அந்த பேனர் வண்டியின் ஸ்டியரிங்கை அசைய விடாமல் தடுக்க, வலது கை தரையில் ஊன்றியது. அதே வேகத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் சிதறி ஓட சாலையில் தேய்த்தபடி முகம் சிதற இருபதடி தூரம் சென்ற சுபஸ்ரீயின் இடுப்பு பகுதி தொடங்கி முகம் வரை பின்னால் வட இந்தியரான மனோஜ் ஓட்டி வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. உடனே நாங்கள் விரைந்தோம். அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரும் ஓடி வந்தார். இறந்து விட்டார் என நினைத்து அவர் மீது விழுந்த அதே பேனரை வைத்து மூடினோம். குளம் போல தேங்கி நின்ற ரத்தத்தில் நான் அக்காவென கத்தினேன். சுபஸ்ரீ “ம்’ என முனகினார். உடனே அவரை அருகிலுள்ள காமாட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இறந்து விட்டார்” என சுபஸ்ரீயின் இரத்தம் தோய்ந்த கடைசி நிமிடங்களை பதிவு செய்தார்.

“இந்த கொலைகார பேனர் பற்றி சுபஸ்ரீயின் மரணம் நடப்பதற்கு 24 மணி நேரம் முன்பே நான் கோவிலம்பாக்கம் ரேடியல் சாலை பகுதியின் மாநகராட்சி செயற்பொறியாளர் பாலாஜியிடம் புகார் செய்தேன். “அமைச்சர்கள் வருகிறார்கள். அப்புறம் எடுத்து விடுவார்கள்’ என பாலாஜி சொன்னார். விபத்து நடந்த 12-ம் தேதி காலையிலும் போய் சொன்னேன். பாலாஜி எனது கோரிக்கையை கேட்கவில்லை. மதியம் நடந்த விபத்தில் சுபஸ்ரீ மரணமடைந்து விட்டார். சுபஸ்ரீயின் மரணத்திற்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம்” என்கிறார் பல்லாவரம்-துரைப்பாக் கம் ரேடியல் சாலைகளில் பேனர்கள் உள்பட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கும் சர்வேயர் விஜய்ரஞ்சன்.

வழக்கை விசாரிக்கும் பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரிடம் விஜய் ரஞ்சன் பேசும் ஆடியோவை நமக்கு போட்டுக் காட்டினார். இதுபோல பேனர்கள் வைத்தால் உதவிப் பொறியாளர் பாலாஜி தனியாக சென்று கல்யாண மண்டப உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்குவார் என்றார். “மாநகராட்சி அதிகாரிகளின் மாமூல் வேட்டைதான் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமா?’ என ஏ.இ.பாலாஜியிடமும் மண்டல அதிகாரி பாஸ்கரனிடமும் கேட்டோம். “நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளுங்கள்’ என பதில் சொன்னதோடு, விஜய் ரஞ்சனையும் மிரட்ட ஆரம்பித்தார்கள். பயந்து போன விஜய் ரஞ்சன் அவர் சப்-இன்ஸ்பெக்டருடன் பேசும் பேச்சின் ஆடியோ பதிவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு சுபஸ்ரீயின் மரணத்திற்கு யார் காரணம் என சொல்லிவிட்டார்.

அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலுக்கு பேனர்னா அப்படி ஒரு வெறி. 2014-ல் என் கல்யாண மண்டபத்துல அவரது மகனுக்கு திருமணம் செஞ்சாரு. அப்ப திடீர்னு பாராளுமன்றத் தேர்தலும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துச்சு. தேர்தல் ஆணைய விதிமுறைகளால் அவர் வைக்க நினைச்ச 1500 பேனரும் வேஸ்டாகிவிட்டது. அதனால இப்ப எங்க ஜே.டி. கல்யாண மண்டபத்துக்கு எதிரில் இருக்கிற சண்முகா டிஜிட்டல் பேனர் என்கிற கம்பெனியில் பேனர் அடிச்சார். நான் கூட அவர்கிட்ட, “ஏம்ப்பா இவ்வளவு செலவு பண்றேன்’னு கேட்டேன். “ஓ.பி.எஸ். வர்றாரு. கே.பி.கந்தன், தன்சிங், வெங்கட்ராமன் ஆகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள்’ என ஏகப்பட்ட பேனர்களை அவரது மச்சான் மேகநாதன் மூலமா வச்சாரு. அவர் அரசியல்வாதி. கட்சிக்காரர்களை வைத்து பேனர் கட்டினார். அவர்கள் சரியாக கட்டவில்லை. சுபஸ்ரீ மரண மடைந்து விட்டார். 2.45 மணிக்கு ஜெயகோபால் வைத்த பேனரினால் சுபஸ்ரீ இறந்து விட்டார் என்கிற செய்தி மாலை 5.30 மணிக்கு திருமண மண்டப வாடகை கொடுக்க வந்த ஜெயகோபாலுக்கு தெரியவில்லை” என்கிறார் திருமண மண்டப உரிமையாளர் ஜெ. துரை.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here