ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

0
429
-Ads-

ராணுவத்தில் பணியாற்றி வரும் தோனிக்கு வீடு திரும்பியது புதிய சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருக்கிறது. தோனியின் மனைவி சாக்‌ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனி வாங்கியிருக்கும் புதிய காரின் புகைப்படத்தை பகிர்ந்து, அது தன்னுடைய குடியுரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று பதிவிட்டார். சாக்‌ஷி அந்த காரை ‘தோனியின் பொம்மை’ என்று குறிப்பிட்டுள்ளார். தோனியுடைய புதிய விளையாட்டு பொருள் எதுவென்று பார்த்தால், ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் – ஒரு மிதமான அளவு கொண்ட எஸ்யூவி, அதில் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 6.2 எல் ஹெமி வி8 எஞ்சின் உள்ளது. இந்த கார் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ளது என சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார்.

“வெல்கம் ஹோம் #redbeast! உங்களுடைய விளையாட்டு பொருள் இப்போது வந்தடைந்தது @mahi7781 நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்! இந்தியாவில் தன்னுடைய குடியுரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது,” சாக்‌ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

தோனிக்கு கார் மற்றும் பைக்குகள் மீது ஆர்வம் அதிகம் என்று நாம் அனைவரும் அறிந்ததே.

ஐஏஎன்எஸ் தகவல்படி, முன்னாள் இந்திய கேப்டன் நிறைய உயர்நிலை வாகனங்கள் வைத்துள்ளார். அதில், பெர்ராரி 599 ஜிடிஓ, ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா, கவாசகி நிஞ்ஜா எச்2, கான்பிடெர்ரட் எக்ஸ்132 ஹெலிகாட், பிஎஸ்ஏ, சுஸுகி ஹயபூஷா மற்றும் நோர்டன் விண்டேஜ் மற்றும் பல பைக்குகள் உள்ளன

எம்.எஸ். தோனி 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து நிறைய யூகங்கள் இருந்தன. ஆனால், அவர் அது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.

மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத ஓய்வு எடுத்துள்ளார். உலகக் கோப்பை அரையிறுதியிலிருந்து வெளியேறிய பிறகு அவர் இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற காஷ்மீர் சென்றார்.

அதனால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் தோனி இடம்பெறவில்லை. இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டி 13 ஓவர்கள் ஆடப்பட்ட நிலையில் மழை காரணமாக தடைப்பட்டது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here