வங்காளதேச டி20 அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் இந்திய தொடரில் இடம் பெறுவது சந்தேகம்

வங்காளதேச டி20 அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் இந்திய தொடரில் இடம் பெற வாய்ப்பு குறைவு என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

0
134
-Ads-

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.  இதற்காக வங்காளதேச அணி நவம்பர் 3 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறது. 

இந்த சூழலில், வங்காளதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹாசன், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.  வங்காளதேச கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறினார். 
வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷகிப் அல் ஹாசன் ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. 

கடந்த இரு நாட்களாக வங்கதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் சகிப் அல்ஹசன் பங்கேற்கவில்லை. சகிப் அல்ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டால், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here