வாக்காளர்களை அச்சுறுத்தும் பாஜக எம்எல்ஏ வீடியோவை ட்வீட் செய்த ராகுல் காந்தி

வாக்காளர்களை அச்சுறுத்துவதைக் காட்டும் பாஜக எம்எல்ஏ வீடியோவை ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

0
288
-Ads-

மராட்டிய மாநிலத்தில்  288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் , அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் , இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 18 மாநிலங்களில் 51 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்களிப்பு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று,  பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினரின்  “மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் எந்த பட்டனை அழுத்தினாலும், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் ” என்று கூறும்  வீடியோ கிளிப் ஒன்றை ட்வீட் செய்துள்ளார். 

அரியான மாநிலம்  அசாந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., பக்ஷிஷ் சிங் விர்க் அரியானாவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை கூறி உள்ளார்.

“பாஜகவின் மிகவும் நேர்மையான மனிதர்” என்று வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி . அதில் கிராஃபிக் தலைப்பு “பாஜக எம்எல்ஏ வாக்காளர்களை அச்சுறுத்துகிறார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here