விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை : இஸ்ரோ சிவன்

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என இஸ்ரோ சிவன் கூறி உள்ளார்.

0
224
-Ads-

நிலவை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பிய விக்ரம் லேண்டர் சந்திரயானிலிருந்து பிரிந்து நிலவுக்கு அருகே 400 மீட்டர் தூரத்தில் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரமிடமிருந்து சிக்னலை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. விக்ரமை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் ஆர்பிட்டரும் தெளிவான படங்களை அனுப்பவில்லை. விக்ரம் லேண்டரின் ஆய்வு காலமான 14 நாட்கள் நேற்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில்  இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். 

விக்ரம் லேண்டர் குறித்து  இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என கூறினார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here