14 நாள்.. அதற்குள் எதாவது செய்ய வேண்டும்.. இபிஎஸ் – ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்!

0
311
-Ads-

சென்னை: அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கடைசி அஸ்திரம் ஒன்றை கையில் எடுக்க போகிறார் என்று கூறுகிறார்கள். இந்த மாத இறுதியில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க 2 வருடமாக முயன்று வருகிறார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலுவாக இருந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு ஆட்சியை கவிழ்ப்பதில் பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. 

ஆனால் தற்போது அதிமுகவை வைத்தே அந்த கட்சியை காலி செய்ய ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை வைத்து ஆட்சியை கவிழ்க்க அவர் யோசித்து வருகிறார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்கிறார். ஆகஸ்ட் 28ம் தேதி முதல்வர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 12ம் தேதி வரை அவர் தமிழகம் வர மாட்டார் என்று கூறப்படுகிறது. 14 நாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். 

இந்த நிலையில் அவர் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் ஆட்சி நிர்வாகத்தை அதிமுகவை சேர்ந்த மூன்று முக்கிய அமைச்சர்கள் சேர்ந்து கவனிக்க இருக்கிறார்கள். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் ஆட்சி பொறுப்பை கவனிக்க இருக்கிறார்கள். 

இந்த 14 நாட்களை பயன்படுத்திக் கொள்ளத்தான் தற்போது ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதிமுக கட்சிக்குள் தற்போது உட்கட்சி பூசல் நிலவுகிறது. அதை தனது சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் விரும்புகிறார். 

அதேபோல் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி இடையே நிலவும் பிரச்சனையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இல்லாத நேரத்தில் எம்எல்ஏக்கள் சிலரிடம் ஸ்டாலின் பேச வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். 

இந்த 14 நாட்களில் ஆட்சிக்கு எதிராக ஸ்டாலின் காய் நகர்த்துவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன் எப்போது வேண்டுமானாலும் அதிமுகவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. 

அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. அதேபோல் அதிமுகவில் இருந்து வேறு சிலர் திமுகவிற்கு வர தயார் என்றும் ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது. இதை எல்லாம் செயல்படுத்த இந்த 14 நாட்கள்தான் சரியாக இருக்கும் என்று திமுக நினைப்பதாக கூறுகிறார்கள். 


-Ads-