அரசு சலுகை பெற ஆதார் கட்டாயம் இல்லை: மத்திய அரசு

0
122
-Ads-

புதுடில்லி: அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என உறுதியளித்துள்ள மத்திய அரசு, இது குறித்த ஆதார் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியது.

ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும், ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். 

அப்போது, அமைச்சர் பேசுகையில், ஆதார் அட்டையை கடுமையாக அமல்படுத்தியதால், அரசின் கஜானாவில் உள்ள பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளிலும் அரசின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் 4.23 கோடி போலி காஸ் இணைப்புகள். 2.98 போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. 7.48 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. 

ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா, ஜாதி, மதம் என பாகுபாடு காட்டாது. ஆதாரில் உள்ள தனிநபரின் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். தகவல் இறையாண்மையை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. மசோதாவில் சில திருத்தங்கள் சேர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

 
 Info courtesy : Dinamalar
-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here