26-ம் நாள் ரோஜா நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்தி வரதர்

0
132
-Ads-

அத்தி வரதர் 26-ம் நாள் ரோஜா நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் வைபவத்தின் 26-ம் நாளான இன்று, ரோஜா நிற பட்டாடையில், பாதாம், அத்திப்பழம், முத்து மாலைகள் அணிந்து தரிசனம் அளித்து வருகிறார். ஆடிக்கிருத்திகையையொட்டி, உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து சென்றுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்கெல்லாம் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து இருப்பதாகவும், இரவு வரை 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே விஐபி தரிசன வரிசையில், போலீசார் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மற்ற பக்தர்களை காத்திருக்க வைப்பதாகவும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு சமரசப்படுத்தினார்கள்.


Info courtesy: dailythanthi
-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here