ஏ 1 – படத்தைப் புறக்கணிக்க வேண்டும் – தமிழ்நாடு பிராமணர் சங்கம்

0
329
-Ads-

சந்தானம் நாயகனாக நடித்து இன்று(ஜூலை 26) வெளியாகியுள்ள படம் & ஏ 1 இப்படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா அலிசா பெரி என்பவர் நாயகியாக நடித்துள்ளார். பிராமணப் பெண்ணை வேறு சாதியைச் சேர்ந்த ஒரு லோக்கல் பையன் காதலிப்பதுதான் இப்படத்தின் கதை.

இந்தப் படத்தின் இரண்டாவது டீசரில் பிராமணப் பெண் ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலைச் சொல்லுவதாக ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. அதற்கு பிராமணர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதை சீப் பப்ளிசிட்டிக்காகச் செய்கிறார்கள் என சந்தானம் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சந்தானத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, படத்தை பிராமணர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும், மற்ற சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து இயக்கங்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் சந்தானத்தின் பேச்சுக்கு அவர்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

வழக்கமாக 11.30 மணிக்குத்தான் காலை காட்சிகள் ஆரம்பமாகும். இந்த சர்ச்சையால் சந்தானம் படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைத்து இன்று அதிகாலை காட்சிகளும், 8 மணி காட்சிகளும் சில ஊர்களில் நடைபெற்றுள்ளன. மற்றவர்களை சீப் பப்ளிசிட்டி என்று கூறும் சந்தானம், டீசரில் வேண்டுமென்றே அந்த ஆம்லெட் காட்சியை வைத்து ஒரு சர்ச்சையைக் கிளப்பி அவர்தான் சீப் பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Info courtesy: dinamalar

 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here