“நல்லா இருந்த வீடும் நடுவுல பூந்த நரியும்..” வனி அக்காவின் சகுனி வேலையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

0
281
-Ads-

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ள வனிதா மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

லக்சுரி டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் வனிதா. தமிழ்நாடு போல் அமைதி பூங்காவாக இருந்த பிக் பாஸ் வீடு, அவரது வருகையால் கலவர பூமியாக மாறியுள்ளது. 

வந்த முதல் நாளே தனது வேலையை காட்டி, கொஞ்சி குலாவிக் கொண்டிருந்த அபியையும், முகெனையும், ரத்தம் வரும் அளவுக்கு சண்டை போட செய்துவிட்டார் வனிதா. இன்று மதுவை உசுப்பேற்றிவிட்டு, ஆண் போட்டியாளர்களுடன் சண்டை போட வைத்திருக்கிறார். 

இதனால் கொந்தளித்துள்ள பிக் பாஸ் ரசிகர்கள், “நாங்க தான் அவங்கள வெளியே அனுப்பிட்டோமே, மறுபடியும் ஏன் அவங்கள உள்ள அனுப்புனீங்க”, என கேள்வி மேல் கேட்டு வருகின்றனர். இதுகுறித்த சில பதிவுகளை இப்போது பார்க்கலாம். 

என்ஜாய் செய்யும் வனிதா “இந்த விவகாரத்தை மேலும் மோசமாக்க மது முயற்சிக்கிறார். அக்கா நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க”, என இவர் கலாய்துள்ளார்.

“இந்த குறும்படத்தை போட்டுக்காட்டி அபியை வெளியே துரத்துங்க. முகென் மேல் எந்த தவறும் இல்லை. அவன் தவிர்த்தாலும் இவள் முகத்தை தூக்கிட்டு போறா. அபியை காயப்படுத்த வேண்டும் என முகென் நினைக்கவில்லை. இப்போது அவனுடைய நிலையை பாருங்க”, என முகெனுக்காக வருத்தப்பட்டுள்ளார் இவர். 

ஒரு போட்டோ போட்டு பிக் பாஸ் வீட்டின் இன்றைய நிலையை உயர்த்தி உள்ளார் இவர். பிக் பாஸ் வீடு பற்றிக்கொண்டு எரிவது போலவும், அதை பார்த்து வனிதா சிரிப்பது போலவும் மீம்ஸ் போட்டுள்ளார்.

“நல்லா இருந்த வீடும் நடுவுல பூந்த நரியும்” என குறிப்பிட்டு வனிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இவர். இவரது இந்த கமெண்டை நூற்றுக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். 

-Ads-