ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு: செப்.19-ம் தேதி வரை திகார்சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

CBI Special Court in Puducherry jail remanded till September 19 - Dinakaran

0
159
-Ads-

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி ஷைனி இன்றுவரை ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் 6-ஆவது முறையாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ தரப்பில், சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் போக்கை சிதைத்துவிடுவார். வழக்கு குறித்து ஏற்கனவே ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றங்கள் நடைபெற்றுள்ளன, சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி என்று சிபிஐ ஆதரவு வழக்கறிஞ்ர் துஷார் மேத்தா தனது வாதத்தை தெரிவித்துள்ளார். சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று தனது வாதத்தை தெரிவித்தது.

ஆனால் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், ப.சிதம்பரம் ஏற்கெனவே 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டார். வேண்டுமென்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ளட்டும். நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால் அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாகும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைய தயார். சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது, சாட்சிகளை கலைக்கவில்லை எனவே நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ஜாமீன் கோரி வாதிடவில்லை, ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கோரி வாதிடுகிறேன் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்துக்கு அனுப்ப கோரும் சிபிஐ மனு மீது இன்னும் அரை மணிநேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஷைனி தெரிவித்தார். பின்னர் விசாரணையை ஆரம்பித்த நீதிபதிகள் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். நீதிமன்ற காவலில் சிதம்பரத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை தனி அறையில் வைக்க வேண்டும் என்றும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here