சிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்ற கூண்டில் ஏறி நின்று ப.சிதம்பரம் வாதம்.. என்ன சொன்னார்?

0
105
-Ads-

டெல்லி: ஐஎன்ஏக்ஸ் வழக்கு தொடர்பாக இன்று சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது தரப்பு நியாயத்தை கூண்டில் ஏறி நின்று பேசினார். 

பெரும் பரபரப்பிற்கு பின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். 

இன்று மதியம் இரண்டு மணிக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 

இதில் சிபிஐ தரப்பும், ப. சிதம்பரம் தரப்பும் மாறி மாறி வாதம் செய்தனர். இந்த வழக்கில் ப. சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில் முக்கியமான வாதங்களை வைத்தார்.அதில், சிதம்பரத்திடம் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றம் கேட்கலாம். அவர் பேச விரும்புகிறார் என்று என்று அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார். 

ஆனால் இதை சிபிஐ கடுமையாக எதிர்த்தது. ஆனால் கடைசியில் ப. சிதம்பரம் பேச நீதிபதி அஜய் குமார் அனுமதிக்கப்பட்டார்.அதன்பின் ப. சிதம்பரம் தனது தரப்பு நியாயத்தை கூண்டில் ஏறி நின்று பேசினார். அதில், என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை நீதிமன்றம் உன்னிப்பாக பார்க்க வேண்டும். 

என்னிடம் கேட்ட கேள்வி எதற்கு நான் பதில் சொல்லாமல் தவிர்க்கவில்லை. உங்களிடம் சிபிஐ சமர்ப்பித்துள்ள ஆவணங்களை பாருங்கள். நான் அனைத்து கேள்விக்கும் பதில் அளித்துள்ளேன். என்னிடம் அவர்கள் வெளிநாட்டில் வங்கி கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை என்று கூறினேன். 

அதன்பின் என்னுடைய மகன் கார்த்தியிடம் வெளிநாட்டில் கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள் . ஆமாம் என்று கூறினேன். இப்படி அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கினேன் என்று ப. சிதம்பரம் கூண்டில் ஏறி நின்று பேசினார். 

-Ads-