டில்லிவாசிகளின் ஆயுள் குறைகிறது

0
376
-Ads-

டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், சுவாச பிரச்னையால் அவமதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு உலக சுகாதார மையம் வழிகாட்டியதை விட காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. நவ.,19 வரை , வழக்கத்தை விட 25 மடங்கு அதிக அளவிலான நச்சு காற்றை டில்லி மக்கள் சுவாசித்துள்ளனர்.


இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் டில்லிவாசிகளின் ஆயுட்காலம், சராசரியை விட 17 ஆண்டுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 20 நாட்களில் டில்லியில் 30 இடங்களில் காற்றின் தரம் 254 க்கும் அதிகமான நிலையிலேயே உள்ளது.
காற்று மாசால். நச்சுத்துகள்கள் மனிதனின் மயிர் கால்கள் வழியாக ரத்த நாளங்களுக்குள் சென்று ரத்தம் உறைதல், ரத்த நாள அடைப்பு, மூளை அல்லது மாரடைப்பு உள்ளிட்ட மேலும் சில நோய்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காற்று மாசு பாதிப்பால் 2017 ன் முன்பகுதி வரை தெற்காசிய நாடுகளில் சுமார் 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here