600 மில்லியன் யூடியூப்பில் புதிய சாதனை படைத்த தனுஷின் ‘ரவுடி பேபி’

0
253
-Ads-

சென்னை: மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலை யூடியூபில் 600 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாரி 2 படம் தனுஷ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. 

அந்த படத்தில் வந்த ரவுடி பேபி பாடலும் சரி, அதன் வீடியோவும் சரி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தத்தித் தத்தி நடக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரவுடி பேபி பாடலை கேட்டால் டான்ஸ் ஆடுகிறார்கள்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடிய ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா தான் டான்ஸ் மாஸ்டர். அந்த பாடலுக்கு வித்தியாசமான முறையில் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்து தனுஷ், சாய் பல்லவியை ஆட வைத்தார் பிரபுதேவா. 

இப்படி வித்தியாசமாக உருவான ரவுடி பேபி பாடலை யூடியூபில் இதுவரை 600 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். யூடியூபில் 600 மில்லியன் வியூஸை தாண்டிய முதல் தென்னிந்திய பட பாடல் என்கிற பெருமையை பெற்றுள்ளது ரவுடி பேபி. 

ரவுடி பேபி மேலும் புதிய சாதனை படைக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் நம்புகிறார்கள். 500 மில்லியன் பேர் பார்த்து ரசித்தபோதே ரவுடி பேபியின் சாதனை தொடரும் என்று தெரிவித்தார்கள் தனுஷ் ரசிகர்கள். அவர்கள் கூறியது போன்றே நடந்துவிட்டது. ரவுடி பேபி அடுத்த சாதனை படைக்கும் வரை காத்திருப்போமாக. 

ரவுடி பேபி பாடலை எழுதியது நம்ம தனுஷ் தான். முதன் முதலாக பாடலை கேட்டவர்கள் என்னடா இது தனுஷ் ஒரு மார்க்கமாக எழுதியிருக்கிறாரே என்றார்கள். ஆனால் அந்த பாடலை கேட்க, கேட்க அனைவருக்கும் பிடித்துவிட்டது. 

தனுஷ் தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பட்டாஸ் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அசுரன் படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here