அப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்!

0
230
-Ads-

திருவள்ளூர்: குளிக்க வைக்க பக்கெட் அருகே குழந்தையை நிற்க வைத்துவிட்டு, செல்போன் பேசி கொண்டிருந்தார் முருகன்.. இறுதியில் அந்த பக்கெட் தண்ணிலேயே குழந்தையின் உயிர் பறிபோய்விட்டது! 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய குழந்தை அருண். வயசு ஒன்றரை ஆகிறது. 

குழந்தையை, பாத்ரூம் பக்கெட்டில் வைத்து குளிக்க வைப்பதுதான் முருகனின் வழக்கமாம்! நேற்றும்கூட அப்படித்தான் பக்கெட் முழுக்க தண்ணிரை நிரப்பினார். குழந்தையை பக்கெட் பக்கத்தில் நிற்க வைத்தார். குளிப்பாக ரெடியாகும்போதுதான் முருகனுக்கு ஒரு செல்போன் வந்தது. அதை எடுக்க அங்கிருந்து நகர்ந்து சென்றார் முருகன். 

அந்த நேரத்தில் நீர் நிறைந்த பக்கெட்டில் குழந்தை ஏற முயன்றபோது, பக்கெட் கவிழ்ந்தது. அதில் இருந்த தண்ணீர் முழுவதும் குழந்தையின் மீது மொத்தமாக கொட்டியது. இதில் குழந்தை அருண் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளான். முருகன் வெளியில் இருந்து கொண்டே குழந்தையை கூப்பிட்டிருக்கிறார். சத்தம் வரவில்லை.. அதனால் பாத்ரூமுக்குள் ஓடிச்சென்று பார்த்தால், குழந்தை திணறி கொண்டிருந்தது. 

இதையடுத்து, குழந்தையை மீட்டு அவசர அவசரமாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து பின், மேல் சிகிச்சைக்காக, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

இதில் கொடுமை என்னவென்றால், குழந்தை தண்ணீரில் மூழ்கிய நேரம், முருகனின் மனைவியும் கிச்சனில்ன் இருந்திருக்கிறார். அங்கு வேலையாக இருந்ததால் அவரும் குழந்தையை கவனிக்கவில்லை. ஆக மொத்தம் அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரேவீட்டுக்குள் இருந்தும் ஒன்றரை வயசு குழந்தை இப்படி அநியாயமாக இறந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here