மதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்

0
129
-Ads-

பெங்களூரு: குடிபோதையில் காரை ஓட்டிய நபர் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார். 

கர்நாடகத்தில் பெங்களூர் நகரில் எச் எஸ் ஆர் லேஅவுட் பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. நடைபாதையில் ஒரு சிறிய பெட்டிக் கடையில் சிலர் டீ, காபி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

இன்னும் சிலர் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் திரும்பி இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. 

பின்னர் நடைபாதையில் நின்றிருந்தவர்கள் மீது மோதிவிட்டு நின்றது. இதில் அந்த கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தோரும் நடந்து சென்றவர்களும் காயமடைந்தனர். 

இந்த விபத்தில் 6 முதல் 7 பேர் வரை காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததும் காரை வேகமாக இயக்கியதும் தெரியவந்தது. அவரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

-Ads-