முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

0
315
-Ads-

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் அல்லது மறைமுக தேர்தல் நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மேலும் திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோருவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரரளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போல் இந்த ஆண்டும், தலா ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here