இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்!

0
214
-Ads-

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்!

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் நல சங்கம் உள்ளது. இதே போன்று முன்னாள் வீரர்கள், இந்தியன் கிரிக்கெட் வீரர்கள் சங்கம்’ என்ற அமைப்பைஇ தொடங்கினர். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்காமல் இருந்தது. இந்நிலையில் இப்போது அங்கீகரித்துள்ளது. இதையடுத்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான அதிகாரப்பூர்வ அமைப்பாக இது இருக்கும்.

இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு, பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியது. அதனடிப்படையில் இந்த சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்புடன் இணைக்கப்படவில்லை.

 

புதிதாக தேர்தல் நடத்தும்வரை இதன் இயக்குனர்களாக கபில்தேவ், அஜித் அகர்கர், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இருப்பார்கள்.

 

Info courtesy: puthiyathalaimurai

 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here