கைமாறியது ஜெயலலிதாவின் ஃபேவரைட் சொத்து!

0
98
-Ads-

சென்னை: ஜெயலலிதா மிக திறமையான ஓட்டுநர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? நடிகையாக இருக்கும் போதே மிக துடிப்பாக கார் ஓட்ட கற்றுக் கொண்டவர். சென்னையில் வீட்டின் அருகில் ஷூட்டிங் என்றால் பல நேரங்களில் தானே கார் ஓட்டிச் செல்வார். 

குறும்பும், பிடிவாதமும், முன் கோபமும் நிறைந்த ஜெயலலிதா கார் ஓட்டக்கூடாது என்று பல முறை எம்.ஜி.ஆர். தடுத்திருக்கிறார். காரணம், சாலையில் யாராவது தன் காரை முந்திவிட்டால் விடாமல் வேகமாய் சென்று அவர்களை முந்துவது, யாராவது ரூலை மதிக்காமல் போய்விட்டால் விரட்டிச் சென்று திட்டுவது என்று செம்ம போல்டாக செயல்படுவார் ஜெயலலிதா. இது அவரது பாதுகாப்புக்கு நல்லதல்ல என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். 

ஆனால் கார் ஓட்டுவதென்பது ஜெயலலிதாவுக்கு உயிர். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக, முதல்வராக ஆன பின்னும் கார் ஓட்டுவதை நிறுத்தவில்லை. அதிலும் கோடநாடுக்கு சென்றுவிட்டால் ஒரு வாரத்தில் நான்கைந்து முறையாவது காரோட்டாமல் இருந்துவிட மாட்டார். 

அதிலும் தன் தோட்டத்திலுள்ள ஏரியை சுற்றி, பேட்டரி கார் ஓட்டுவது அவருக்கு ரொம்ப பிடிக்கும். தன் எஸ்டேட்டினுள் பேட்டரி காரை தானே ஓட்டிச் சென்று, தன் ஊழியர்களிடம் பேசிப் பழகுவார். இந்த சமயங்களில் சசிகலாவை தன் அருகில் சீட்டில் உட்கார வைத்திருப்பார். 

ஒருமுறை நள்ளிரவில் ஜெயலலிதா கோடநாடிலிருந்து ஊட்டிக்கு காரில் சென்றாராம். திரும்பி வரும்போது சாலையில் மகேந்திரா நிறுவனத்தில் புது ரக காரை பார்த்துவிட்டு லயித்துவிட்டார். மறுநாள் கோயமுத்தூரிலிருந்து அதே மாடல் கார்கள் இரண்டு ஜெயலலிதா டெஸ்ட் டிரைவ் பண்ண அனுப்பப்பட்டது. அந்த மாடல் பிடித்துப் போக, அடுத்த மூன்று மணி நேரத்தில் அதே கோயமுத்தூரிலிருந்து அதேமாடல் புத்தம் புதிய கார் கோடநாடு பங்களாவின் போர்டிகோவை அலங்கரித்தது. 

இப்படியாக ஜெயலலிதாவுக்கும், கார்களுக்குமான பந்தத்தை சொல்லிக் கொண்டே போகலாம். இந்நிலையில் ஜெயலலிதா எம்.பி.யாக இருந்தபோது மாருதி 800 கார் ஒன்றை டெல்லியில் பயன்படுத்தினார். பல நாட்கள் கோட்டைக்கு அவரே அதை ஓட்டிச் சென்றிருக்கிறார். அவருடைய ஆல்டைம் ஃபேவரைட் கார்களில் அதுவும் ஒன்று. 

அவர் மாநில அரசியலுக்கு திரும்பிய பின்னும் அந்த கார் அங்கேயே இருந்தது. பின் மைத்ரேயன் அ.தி.மு.க.வின் எம்.பி.யாக தொடர்ந்து சில முறை ஆன போது அவரது வீட்டிலேயே அந்த காரை வைத்து பராமரித்தார். தினமும் துடைத்து, சுத்தம் செய்து வைத்திருப்பாராம். சமீபமாக அவரது பதவிக்காலம் முடிந்ததும், அந்த காரானது அ.தி.மு.க.வின் சிட்டிங் ராஜ்யசபா எம்.பி.யான வைத்திலிங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. 

ஆக ஜெயலலிதாவின் கார் கைமாறிவிட்டது! 

-Ads-