ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

0
130
-Ads-

சென்னை : ரூ.269 கோடியில் கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். கரூர் காந்தி கிராமத்தில் 17.45 ஏக்கரில் ரூ. 269 கோடிமதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி திறந்துவைக்கப்பட்டுள்ளது.8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 700 படுக்கை வசதிகளுடன் 150 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வசதிகள் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. இங்கு சுமார் 800 நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியும். 

இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து இன்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அத்துடன் கோயம்பத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், திருவள்ளுர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த மருத்துவக் கல்லூரிக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு அரசியல் காரணங்களால் இடம் தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரிக்கான கட்டிடப் பணிக்கு அடிக்கல நாட்டப்பட்டு பணி தொடங்கியது. 15 மாதங்களில் பணி நிறைவுப் பெற்று இன்று மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த மே மாதம் கரூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.இதனால் நடப்பு கல்வி ஆண்டில் இங்கு மாணவர்களின் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. கல்லூரிக்கு முதற்கட்டமாக 150 எம்பிபிஎஸ்  இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க பெறும் மொத்த மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  Info courtesy: Dinakaran

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here