முதலீடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை: ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

0
80
-Ads-

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. 6 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.

இந்த மந்த நிலையை மாற்றி, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முதலில் மோட்டார் வாகனத்துறைக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அவர் சலுகைகளை அறிவித்ததோடு, பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்றார்.

அடுத்து அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மூன்றாவது நடவடிக்கையாக, வீட்டு வசதித் துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ரூ.70 ஆயிரம் கோடி சலுகைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில் கோவா தலைநகர் பனாஜியில் நேற்று சரக்கு, சேவைவரி கவுன்சிலின் 37-வது கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்மலா சீதாராமன், அங்கு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பெரு நிறுவனங்களுக்கு அதிரடியாக சுமார் ரூ.1½ லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

இது நாட்டில் முதலீடுகளையும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் 4-வது நடவடிக்கையாக அமைந்துள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு சலுகை மழைபோல அமைந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பொருளாதார வளர்ச்சியையும், முதலீட்டையும் ஊக்குவிக்கும் வகையில், 2019-20-ம் நிதி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தும் வகையில் வருமான வரிச்சட்டத்தில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு பிற விலக்குகளோ, சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here