நீலகிரியில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணை நிரம்புகிறது: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0
283
-Ads-

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போதுவரை பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயகன் பாளையம், தடாகம், மலுமிச்சம்பட்டி, துடியலூர், தொண்டமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கோவை மாநகரப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் பாய்வதால் வாகனப் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மலைசார்ந்தப் பகுதிகள் ரம்மியமாக காட்சி தருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 3 தாலுகாக்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளளவை நெருங்குகிறது. 

இன்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்ததால் 100 அடி கொள்ளளவைக் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 95 அடியாக உயர்ந்துள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியே நொடிக்கு 12,000 உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் வெளியேற்றம் அதிகரிக்க கூடும் என்பதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்துறையினரும் போலீசாரும் இணைந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.Info Courtesy: Dinakaran

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here