எதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்?

0
117
-Ads-

ஸ்ரீநகர்: காஷ்மீர் விவகாரத்தில் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது பாகிஸ்தான். இதுகுறித்து இந்திய ராணுவம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. 

காஷ்மீர் எல்லையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. தாக்குதல் நடத்தக்கூடிய பகுதி என்பது அடுத்தடுத்து பல பகுதிகளுக்கும் விரிவாகி வருகிறது. பிரிவினைவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டால் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வந்தது. 

காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையின் போது வன்முறையை தூண்டி விட பாகிஸ்தான் முயற்சி செய்தது. வெள்ளிக்கிழமை தொழுகை கூட்டத்திற்கு பிறகாவது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் அதுவும் நடைபெறவில்லை. எனவே எப்படியாவது காஷ்மீர் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. 

பாகிஸ்தான் அத்துமீறி இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தும். இதையே ஐக்கிய நாடுகள் சபையில் புகாராக முன்வைக்கலாம் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. மேலும் சீனாவையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு இது உதவும் என்றும் பாகிஸ்தான் நினைக்கிறது. சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லையில் பதட்டத்தை பாகிஸ்தான் செயற்கையாக அதிகரித்து வருகிறது. 

எல்லையில் பாகிஸ்தான் தனது தாக்குதல்களை அதிகரிக்க கூடும் என்று இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. 

-Ads-