உலகின் பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ.. விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ராணுவம்

அமேசானில் காட்டுத்தீ.. விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ராணுவம்-வீடியோ

0
112
-Ads-

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கட்டுக்கடங்காத தீ அணையாமல் எரிந்து கொண்டிருப்பதால் அதை அணைக்க விமானங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணிகள் நடைபெற்றன. 

உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசான் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

இங்குள்ள அமேசான் காட்டில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதை அணைக்க பிரேசில் அரசு போராடி வருகிறது. எனினும் தீ கொழுந்து விட்டு எரிவதாலும் சுவாலை அதிகமாக இருப்பதாலும் அதை அணைப்பதில் கடினமாக உள்ளது.

இந்த நிலையில் அரிய வகை மூலிகைகளையும் அரிய வகை செடி, மரங்களையும் காக்க வேண்டும் என பிரேசில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரிய வகை பாம்பு வகைகள், உயிரினங்கள் அழிந்து போகும் தருவாயில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அரிய வகை மூலிகைகளையும் அரிய வகை செடி, மரங்களையும் காக்க வேண்டும் என பிரேசில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரிய வகை பாம்பு வகைகள், உயிரினங்கள் அழிந்து போகும் தருவாயில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் காடுகளுக்கு சொந்தக்காரர்கள் என கூறப்படும் பழங்குடியின காட்டுவாசிகள் காட்டுத்தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீயை அணைக்க 7 மாநிலங்களில் இருந்து ராணுவத்தினரை பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ வரவழைத்துள்ளார். இதையடுத்து ஜெட் விமானங்களில் உள்ள தண்ணீரின் பைப்பை புளோயருடன் இணைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

-Ads-