நீங்க.. முரட்டு சிங்கிள்..? பிரேம்ஜியை விளாசும் நெட்டிசன்கள்

0
122
-Ads-

ஜாம்பி பட விழாவில் பிரேம்ஜி , முரட்டு சிங்கிள் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட டி-சார்ட் அணிந்து யாஷிகா ஆனந்த் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கடந்த மாதம் தனது ஃபேஸ்புக் பதிவில் பிரேம்ஜி பதிவிட்ட கருத்து அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்ற வதந்தி பரவ காரணமாக அமைந்தது. அதில், ஆணும் பெண்ணும் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஒவர் என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்தார் பிரேம்ஜி.

இந்த வதந்தி குறித்து ஜாம்பி பட விழாவில் விளக்கமளித்த பிரேம்ஜி, “கேம் ஓவர் என்ற டி-சர்ட் அணிந்து ட்விட்டரில் ஒரு பதிவிட்டேன். கல்யாணம் ஆனால்தான் கேம் ஓவர். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதனால் நிறைய பேரிடம் வாழ்த்துகள் வந்தன.

பலர் என்னைத் தொடர்பு கொண்டு யார் அந்த பெண், எப்போது திருமணம் என்றெல்லாம் கேட்டார்கள். இன்னும் நான் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்ற டி-சர்ட் அணிந்து வந்திருக்கிறேன். நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான்” என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பாகவே நான் யாஷிகாவின் தீவிர ரசிகன். அது அவருக்கே தெரியும் என்று கூறியிருந்தார். மேலும் யாஷிகா உடன் அருகே உட்காந்திருக்கும் புகைப்படத்தை பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேம்ஜியின் இந்த பதிவிற்கு நடிகர் சதிஷ், மஹத் ஆகியோர் கிண்டலாக தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர். மஹத் பதிவிட்டுள்ள கருத்தில் என்ன நடக்குது யாஷிகா என்று கிண்டலாக கேட்க, அதற்கு யாஷிகா நாங்க கண்ணுலேயே பேசுகிறோம் என நக்கலடித்துள்ளார்.

மேலும் பலர் சிங்கிள் சிங்கிள் சொல்லியே பிரேம்ஜி எல்லா பொண்ணுங்களையும் கரெக்ட் செய்தவர் என்றும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு என ரஜினியின் பேச்சை வைத்து கிண்டலடித்துள்ளனர்.

-Ads-