ரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது

0
245
-Ads-

ரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

 

புதுடெல்லி, 

மத்திய அரசு மற்றும் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் திறமையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதே நடைமுறையை ரெயில்வே துறையும் பின்பற்ற தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “ரெயில்வேயில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் மற்றும் 55 வயது ஆனவர்களில், பணியில் திறம்பட செயல்படாத மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி பிராந்திய அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

 

இதற்கான பட்டியலை வருகிற 9-ந் தேதிக்குள் அனைத்து பிராந்திய ரெயில்வே துறையினரும் அளிக்க வேண்டும். மேலும் ஊழியர்களின் உடல் தகுதி, நேரம் தவறாமை குறித்தும் கணக்கெடுக்க வேண்டும். இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணிதான். பணியில் திறம்பட செயல்படாதவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதில் அரசு மிகவும் கவனமாக உள்ளது. ரெயில்வேயில் தற்போது 13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதனை வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேராக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு ரெயில்வேயில் 3 லட்சம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Info courtesy: dailythanthi

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here