தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

0
383
-Ads-

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை, 
 
தமிழகத்தின் பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று(திங்கட்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
 
மிதமான மழைக்கு வாய்ப்பு
 
வளிமண்டலத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை குறைந்து உள்ளது.
 
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
27 சதவீதம் குறைவு
 
நேற்றைய (நேற்று முன்தினம்) நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைந்து உள்ளது.
 
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Info courtesy: Dailythanthi
-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here