ரோகினி திரையரங்கிற்கு 100 மடங்கு அபராதம்..! ரூ150 க்கு ரூ15000 பழுத்தது..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், அரசு நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், திரையரங்கம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தைப் போல 100 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0
132
-Ads-

செசென்னை கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கம் உள்ளது. இங்கு குறைந்த பட்சக் கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சக் கட்டணமாக 100 ரூபாயும் மட்டுமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்று.

சென்னை கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கம் உள்ளது. இங்கு குறைந்த பட்சக் கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சக் கட்டணமாக 100 ரூபாயும் மட்டுமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்று.

அதுவும் பண்டிகை நாட்களில் வெளியாகும் ரஜினி, அஜீத், விஜய் படங்கள் என்றால் முதல் மூன்று நாட்கள் டிக்கெட் விலை ஆயிரத்தைத் தாண்டும். அதனையும் சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள் சாதனையாகக் கூறி வாங்கிச்செல்வார்கள்.

இந்த நிலையில் செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ந்தேதி ஆன்லைனில் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார். டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவு கட்டணமாக 35 ரூபாய் 40 பைசா என்று மொத்தம் 185 ரூபாய் 40 பைசாவை வசூலித்து உள்ளது ரோகிணி திரையரங்க நிர்வாகம்.

இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் ரோகிணி திரையரங்க கட்டண கொள்ளையால் தனக்கு நேர்ந்த மன உளைச்சல், இழப்பீடு கோரி தேவராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமிகாந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தேவராஜனுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், மனஉளைச்சலுக்காக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க ரோகிணி திரையரங்கத்திற்கு, நீதிபதி உத்தரவிட்டார். 15 ஆயிரம் ரூபாய் என்பது ரோகினி திரையரங்க நிர்வாகம் கூடுதலாக வசூலித்த டிக்கெட் தொகையான 150 ரூபாயில் 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மால்களில் இடம்பெற்றுள்ள திரையரங்குகளில் மல்டி பிளக்ஸ் ஏசி திரையரங்குகளுக்கு அதிக பட்சமாக 150 ரூபாயும், குறைந்த பட்சமாக 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, திரையரங்குகளுக்கு காம்பள்க்ஸ் ஏசி திரையரங்குகளுக்கு 100 ரூபாயும் குறைந்த பட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கு 80 ரூபாயும், குறைந்தபட்சக் கட்டணமாக 30 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும், ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் ஏசி திரையரங்கம் என்றால் 75 ரூபாயும், குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சமாக 50 குறைந்தபட்சமாக 20 ரூபாயும் வசூலிக்க வேண்டும். ஆனால் மால்களில் உள்ள திரையரங்குகள் முன்பதிவு என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகளில் ஒருபோதும் அரசு நிர்ணயித்த விலைக்கு டிக்கெட் விற்பது இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

எந்த ஒரு திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது வழக்கு தொடர விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட டிக்கெட் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், அங்கு சுயமாக வாதாடி பொறுமையாக வழக்கை ஆதாரத்துடன் எதிர் கொண்டால் இழப்பீடு பெறலாம் என்கிறார் தேவராஜன்

இதே போல கட்டுப்பாடின்றி விலைவைத்து விற்கப்படுகின்ற பாப்கார்ன், குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்ற நொறுக்கு தீனிவகைகளுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செய்ய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..! என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here