-Ads-

கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது

புதுடெல்லி: 66வது தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷுக்கு’ வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுஷல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த ஹிந்தி மொழி படத்திற்கான தேசிய விருது ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதுன்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ஜிகல் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’உரி’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here