ஸ்மார்ட் வை-பை பிளக்

0
180
-Ads-

இப்போது வீடுகளும் ஸ்மார்ட்டாக மாறிவருகின்றன. பெரும்பாலான வீடுகளில் அலெக்ஸா, கூகுள் அசிஸ்ட் போன்றவை புழக்கத்துக்கு வந்துவிட்டன.

அத்தகைய வீடுகளை மேலும் ஸ்மார்ட் வீடுகளாக்க வந்துள்ளதுதான் ஸ்மார்ட் பிளக். வை- பை மூலம் செயல்படும் இந்த பிளக்கை காஸா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 4,999.
 
அலெக்ஸாவின் குரல்வழி கட்டுப்பாடு மூலம் வீட்டில் உள்ள மின் இணைப்பில் செயல்படும் கருவிகளை கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த ஸ்மார்ட் பிளக் உதவும். உலகின் எந்த பகுதியிலிருந்து ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் உள்ள மின்சார செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் வீட்டிலிருந்து வெளியே ஷாப்பிங் செல்கிறீர்கள். கடுமையான கோடை காலம். வீட்டுக்கு வரும் முன்பாகவே உங்கள் அறையில் ஏ.சி. குளிர்ச்சியாக இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றினால், நீங்கள் உடனே வீட்டில் உள்ள அலெக்ஸாவை ஸ்மார்ட்போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த பிளக்கை செயல்படுத்தலாம். அலெக்ஸா இல்லாவிடில் காஸா ஆப் (செயலி) மூலம் இந்த ஸ்மார்ட் பிளக்கை செயல்படுத்த முடியும்.

வீட்டில் உள்ள ஏ.சி., தண்ணீருக்கான மோட்டார் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் நீங்கள் தொலை தூரத்தில்இருந்தும் நிர்வகிக்கலாம். வழக்கமான பிளக்கைப் போன்றுள்ளதால் இதை நிறுவுவதும் எளிது. ஸ்மார்ட் வீடுகளுக்கு ஏற்ற ஸ்மார்ட் பிளக் இது.Info Courtesy: Dailythanthi

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here