சென்னை மண்ணடியிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..: சேவைகள் பாதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

0
207
-Ads-

சென்னை: சென்னை மண்ணடியிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் சேவைகள் சற்று பாதிக்கப்படும் என அந்நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை 6.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் பிடித்த தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இது தொடர்பாக தகவல் அறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுக்க புகை மூட்டமாக  காணப்படுவதால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

அதிகாலை நேரம் என்பதால், பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம், இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. முதல் தளத்தில் உள்ள சர்வர்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. சர்வர்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் கொண்ட செல்போன், லேண்ட்லைன் மற்றும் இணையதள சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சர்வர் பிரச்சனை இன்று மாலைக்குள் சீரடையும் என்றும், துரிதமாக செயல்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.Info courtesy : Dinakaran

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here