அந்த பையனுக்கு தகுதி இல்லீங்க..! மறுபடியும் ஏன் 4வது இடத்தில் விளையாட அனுப்புறீங்க..?

0
278
-Ads-

மும்பை: பன்ட் 4வது வீரருக்கு தகுதி இல்லாதவர், ஸ்ரேயாஸ் அய்யரே அதற்கு பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியிருக்கிறார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்கினார். 

34 பந்துகளை சந்தித்து வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரிஷப் பன்ட் 4வது வீரராக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது: கோலி தொடர்ந்து 4வது வீரராக ரிஷப் பன்டை களம் இறக்குகிறார். ஆனால் அவரின் இந்த முடிவை நான் விரும்பவில்லை. ஏனெனில் பண்ட் 4வது இடத்திற்கு தகுதியான வீரர் கிடையாது. 

அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யரை 4வது இடத்தில் களம் இறக்கலாம். அதற்கு உதாரணமாக நேற்றைய போட்டியை சொல்லலாம். பன்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் அணியின் சூழலைப் புரிந்து நிதானமாக விளையாடினார். 

கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தார். 71 ரன்கள் குவித்து அணியை நிலைப் படுத்தினார். பன்ட்டின் அதிரடி, அவரது பாணி 4வது இடத்திற்கு பொருந்தாது. எனவே ஷ்ரேயாஸ் அய்யரை 4வது இடத்திலும், பன்டை 5 அல்லது 6 ஆவது இடத்தில் களமிறக்கினால் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். 

ஏற்கனவே பல ஆண்டுகளாக தேடி, தேடி 4வது யார் என்ற விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவெடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் சூழலுக்கு ஏற்ப சரியான வீரரை களமிறக்குவதில் தவறு செய்து கொண்டு இருப்பதை கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை பிசிசிஐ கவனத்தில் கொள்ளுமா என்று தெரியவில்லை. 

-Ads-