முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மரணம்

0
244
-Ads-

முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று திடீரென மரணம் அடைந்தார்.

புதுடெல்லி, 

பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் (வயது 66). கடந்த பா.ஜனதா ஆட்சியில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 10.20 மணிக்கு சுஷ்மாசுவராஜை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

வக்கீலான இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் டெல்லி மாநில முதல்-மந்திரியாகவும் இருந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியதும் பிரதமர் நரேந்திரமோடிக்கு சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், ‘நன்றி பிரதமர் அவர்களே, இந்த நாளுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதுவே அவரது கடைசி வாழ்த்தாக மாறி விட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.

 

Info Courtesy: Dailythanthi

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here