ஹீரோ, பட்டாஸ்… சூரரைப் போற்று- கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வெல்வது யார்

0
247
-Ads-

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் சூர்யா, தனுஷ், மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில், பாக்ஸ் ஆஃபிஸை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெரிய பட்ஜெட் படங்களும், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் தயாரிக்கும் படங்களும் தான் பெரிய தியேட்டர்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்ற பின்பு, திரைப்படங்களை வெளியிடுவதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டுவந்ததார். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிபோடப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதனோடு சிவகார்த்திகேயனின் அதிரடி திரில்லர் படமான ஹீரோவும் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று அனைத்து திரையரங்குகளும் களைகட்டப் போகிறது. 

இருப்பினும் இன்றைய பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமார் படங்களே நம்பகத்தன்மையோடு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்களது எண்ணிலடங்கா ரசிகர்கள் பட்டாளம். தனுஷ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் ஆகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. 

இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இவருடன் சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்சாடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மித்ரன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஹீரோ. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் அபய் தியோல் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் சூரரை போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த மூன்று முன்னணி ஹீரோக்களின் படமும் வெளியாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மூன்று ஹீரோக்களும் மோதி கொள்ளும் போட்டியில் யார் பாக்ஸ் ஆபிஸை வெல்ல போகிறார் என்பதை ஏதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம். 

-Ads-