நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது -அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

0
189
-Ads-

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர், அமைச்சர்கள் ரகசியமாக வெளிநாடு செல்லவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட  தவிடுபொடியாகி விட்டது.

நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அமெரிக்கா ரஷ்யா அதிபர்களை  திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால், அதை கண்டிப்பாக ஏற்கமாட்டோம். பாதிப்பு எதுவும் வராதபட்சத்தில் அத்திட்டத்தை ஏற்போம் என கூறினார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here