மத்திய பட்ஜெட் 2019: 2 மணிநேர பட்ஜெட் உரை நிறைவு

0
115
-Ads-
 1.   வங்கிக்கடன் பெற்று குறைந்த விலை வீடு வாங்கினால் வட்டியில் 1.5 லட்சம் வரை வரி விலக்கு. 15 ஆண்டுகள் வீட்டுக்கடன் மீது ரூ.7 லட்சம் வரை மிச்சப்படும்.
 2.  பாமாயில் இறக்குமதிக்கு அளித்த வரிச்   சலுகை ரத்து. 
 3. பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு பற்றி எதையும் குறிப்பிடவில்லை. நிதிப் பற்றாக்குறை 3.4% லிருந்து 3.3% ஆகக் குறைக்கப்பட்டடுள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வரி 10% லிருந்து 12.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 4. மின்சார வாகனங்களின் குறிப்பிட்ட சில பாகங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு.
 5.  ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்க வரி கிடையாது.
 6. ஜிஎஸ்டி மூலம் ஆண்டுக்கு 92 ஆயிரம் கோடி வரிச் சலுகை தரப்படுகிறது.
 7. 2 முதல் 5 கோடி வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 3% வரி. 5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் கூடுதலாக 7% வரி.
 8. ரொக்க பரிவர்த்தனையைக் குறைக்க ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு வங்கிக் கணக்கிலிருத்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்டால் 2% வரிப் பிடித்தம் (TDS) செய்யப்படும்.
 9. பான் கார்டு தேவைப்படும் இடங்களில் ஆதார் கார்டு பயன்படுத்தும் வசதி அமல்படுத்தப்படும். வருமான வரி செலுத்தவும் பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.
 10. வங்கிக்கடன் பெற்று குறைந்த விலை வீடு வாங்கினால் வட்டியில் 1.5 லட்சம் வரை வரி விலக்கு. 15 ஆண்டுகள் வீட்டுக்கடன் மீது ரூ.7 லட்சம் வரை மிச்சப்படும்.
 11. 400 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி. நாட்டின் 99.3% நிறுவனங்கள் இந்த வரி வரம்புக்குகள் வருகின்றன
 12. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு.
 13. வங்கிக்கடன் பெற்று மின்சார வாகனம் வாங்கினால் வட்டியில் 1.5 லட்சம் கோடி வரை வருமான வரி விலக்கு.
 14. வரி வசூல் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து 11.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
 15. பிசிராந்தையாரின் புறநானூற்று பாடலை மேற்கொள்காட்டி வரி வசூல் முறைக்கு விளக்கம்.
 16. 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் புதிய வடிவமைப்பில் பார்வையற்றோரும் அடையாளம் காணும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
 17. இந்தியாவின் சர்வதேச கடன் ஜிடிபியில் 5% ஆக உள்ளது
 18. பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆக இருக்கும்.
 19. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
 20. கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரோபோக்கள் பயன்படுத்த நடிவடிக்கை
 21. வங்கிகளில் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூல்.
 22. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு மூலதனத் தொகை வழங்கப்படும்.
 23. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்பினால், 180 நாட்களுக்குள் ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை.
 24. 35 கோடி எல்ஈடி பல்புகள் உஜ்வாலா திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்பட்ட மின்சிக்கனம் காரணமாக ரூ.18,341 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
 25. கவுஷல் விகாஸ் யோஜனா மூலம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
 26. தேசிய அளவில் விளையாட்டுக் கல்வி வாரியம் உருவாக்கப்படும்.
 27. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்படும் வகையில் டிவி சேனல் தொடங்கப்படும்.
 28. கல்விக்காக புதிய உயர்கல்வி ஆணையம் தொடங்கப்படும். ஆராய்ச்சியை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.
 29. உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களில் மூன்று இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெற வைத்துள்ளோம்.
 30. பங்குச்சத்தையில் பட்ஜெட் தாக்கல் எதிரொலி: பகல் 11.45க்கு சென்செக்ஸ் 82 புள்ளிகள் சரிவு. நிப்டி 37 புள்ளிகள் வீழ்ச்சி.
 31. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதிக்குள் திறந்தவெளி மலம் கழிக்கும் வழக்கம் இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும்.
 32. தேசிய அறிவியல் அருங்காட்சியம் மூலம் காந்திபீடியா என்ற கலைக்களஞ்சியம் உருவாக்கப்படும்.
 33. 5 லட்சம் கிராமங்கள் தங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவையாக மாறியுள்ளன.
 34. 2002 முதல் 2014 வரை 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
 35. ஹர் கல் ஜல் என்ற திட்டம் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.
 36. தனியார் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும்.
 37. ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மைக்கு வசதி செய்யப்படும்
 38. 75,000 தொழில்முனைவோருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
 39. 30,000 கி.மீ. தொலைவுக்கு சுற்றுச்சூழலைப் பாதிக்காத பசுமை சாலைகள் போடப்படும்.
 40. 50,000 கைவினைக் கலைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
 41. 5 ஆண்டுகளில் 80,250 கோடி ரூபாய் மதிப்பில் 1.25 லட்சம் கி.மீ. சாலைகள் போடப்படும்.
 42. 2021க்குள் 1.95 கோடி ஏழை குடும்பத்தினருக்கு சொந்த வீடு கிடைக்க நடவடிக்கை.
 43. 5 ஆண்டுகளில் 7 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 44. இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டான 2022க்குள் ‘விருப்பம் உள்ள’ அனைத்து வீடுகளிலும் முழுமையான மின்சாரம் மற்றும் தூய சமையலறை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 45. விமானத்துறை மற்றும் ஊடகத்துறையில் அந்நிய முதலீடுக்கான அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்.
 46. தேசிய அளவிலான முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
 47. மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்
 48. காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி
 49. சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு மட்டும் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 50. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
 51. ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்ய திட்டம்.
 52. ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு தனியாருடன் இணைந்து செயல்பட மத்திய அரசு தயாராக உள்ளது.
 53. ஆண்டுக்கு 1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் 3 கோடி பேருக்கு பலன் கிடைக்கும்.
 54. பாரத்மாலா, சாகர்மாலா, உதான் போன்ற திட்டங்கள் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றன.
 55. 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டம்.
 56. உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் குறைந்த விலையில் விமான சேவை.
 57. ஒரே நாடு ஒரே மின்விநியோகம் என்ற திட்டம் மூலம் நாடு முழுக்க சமமான மின் விநியோகம் செய்யப்படும்.
 58. கடந்த 5 ஆண்டுகளில் உணவு பாதுகாப்புக்காக 2 மடங்கு நிதி செலவிடப்பட்டுள்ளது.
 59. சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே முதல் இலக்கு.
 60. கங்கை ஆற்றில் படகுப் போக்குவரத்து 4 மடங்கு அதிகரிக்கப்படும்.
 61. 5 ஆண்டுகளில் 657 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 62. இந்தியா ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையை 55 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓராண்டில் இந்தியா 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்.
 63. மேக் இன் இந்தியா திட்டம் நாட்டின் சொத்தை அதிகரிக்கிறது. அதனைத் தொடர்ந்து ஊக்குவிப்போம்.
 64. பட்ஜெட் உரையின்போது உருதுமொழியிலிருந்து மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா சீதாராமன்.
 65. அந்த மேற்கோளுக்கு மன உறுதியுடன் மனிதர்கள் எடுக்கும் பணிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று பொருள்.
 66. 2014ல் ஆட்சி அமைக்கும்போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த இந்தியப் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.
 67. டிஜிட்டல் இந்தியா முயற்சி அனைத்து துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 68. புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
 69. உணவு பாதுகாப்புத் திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு நிதி ஒதுக்கீடு
 70. எல்லோருக்கும் வீடு… ஆனால், காலி மனை வைத்திருந்தால் வரி!
 71. காலியாக வைத்திருக்கும் மனைகளுக்கு 5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வரி விதிப்பது குறித்த அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இருக்கக்கூடும்.
 72. பட்ஜெட் தாக்கல் எதிரொலி: 40,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்

 

Info courtesy:Times Of India

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here