வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சட்ட விரோத கிணறுகள் வெட்டி தண்ணீர் திருட்டு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0
384
-Ads-

தேனி: வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்ட விரோதமாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணை தேனி, மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும்  தேனி உட்பட 5 மாவட்டங்களில் வேளாண் உள்ளிட்ட தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றது. இதை தொடர்ந்து அணையில் தற்போது இருக்கும் தண்ணீர் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையையை பூர்த்தி செய்யும் அளவிற்கே உள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 50 அடி ஆழம் வரை கிணறுகள் தோண்டப்பட்டு தண்ணீர் திருடப்பட்டு வருகின்றது. இதை அடுத்து சொக்கத்தேவன்பட்டி, பின்னதேவன்பட்டி, சக்கரப்பட்டி, சாவடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் அதிகமான இடங்களில் இது போன்ற சட்ட விரோதமான கிணறுகள் வெட்டப்பட்டிருக்கின்றன. 

மேலும் இவற்றில் இருந்து மோட்டார்கள் மூலமாக பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விளைநிலங்களுக்கும், செங்கல் சூளைகளுக்கும் இரவு நேரங்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வைகையில் அரங்கேறும் இந்த சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வைகை அணையின் உதவி செயற்பொறியாளர் செல்வத்திடம் கெட்டப் போது அவ்வாறு கிணறுகள் எதுவும் அமைக்கப்படவில்லை என பதிலளித்துள்ளார். ஒருவேளை சட்ட விரோத கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.மேலும் இவற்றில் இருந்து மோட்டார்கள் மூலமாக பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விளைநிலங்களுக்கும், செங்கல் சூளைகளுக்கும் இரவு நேரங்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வைகையில் அரங்கேறும் இந்த சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து வைகை அணையின் உதவி செயற்பொறியாளர் செல்வத்திடம் கெட்டப் போது அவ்வாறு கிணறுகள் எதுவும் அமைக்கப்படவில்லை என பதிலளித்துள்ளார். ஒருவேளை சட்ட விரோத கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

 

 

 

Info courtesy: Dinakaran

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here